அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த கால கட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என்று அவருடை எதிர் தரப்பினரால் குற்றம் சாட்டுப்படுவதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை சொத்து விவகாரத்தில் மாட்டியிருப்பதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் சுமன் கவி, யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அண்ணாமலை ரூ.85 கோடிக்கு சொத்து வாங்கியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை மாரிதாஸ் வெளியிட்டிருக்கிறார். அதுதொடர்பாக கல்யாணராமன் போன்ற மூத்த தலைவர்களும் அதை டிரெண்ட் செய்கிறார்கள். உண்மையில் அந்த சொத்து ரூ.4.5 கோடிக்கு தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரூ.85 கோடி என்பது ஒரு யூக மதிப்பாகும். அதனை அண்ணாமலை மறைத்து இயற்கை விவசாயம் செய்ய போவதாக சொல்கிறார். அண்ணாமலை இதை மட்டும் செய்யவில்லை. எதிர் தரப்பு அமைச்சர்களிடம் இருந்து ரூ.250 கோடி வாங்கியதற்கான ஆதாரங்கள் குருமூர்த்தியிடம் இருப்பதாகவும், அதை அமித்ஷாவிடம் அவர் தெரிவித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த 2021 – 2024 வரையிலான 3 ஆண்டு காலத்தில் மட்டும் அண்ணாமலை ரூ.10 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார் என்றும் குருமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்களால் சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி இங்குள்ள மற்றவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கோ, அரசியல் திட்டத்திற்கோ இணங்காமல் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துகிற வேலையை செய்துள்ளார். அதனால் தான் அவர்கள் அண்ணாமலையை காலி செய்கிறார்கள்.
கர்நாடக ஆர்எஸ்எஸ் தலைவர் பி.எல்.சந்தோஷ், அண்ணாமலையை தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறபோது இங்குள்ளவர்களுக்குஒரு நெருடல் இருந்தது. ஆனாலும் அவர் ஒரு இளைஞர் என்பாதாலும், தன்னுடைய ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார் என்றும் ஒரு பார்வை இருந்தது. அத்துடன், அண்ணாமலையை முன்னிலைப்படுத்துவது தமிழக பாஜகவின் நோக்கம் அல்ல. ரஜினியை தான் முன்னிலைப்படுத்த விரும்பினார்கள். ரஜினியை அரசியலுக்கு கொண்டு வருவேன் என்று குருமூர்த்தி உறுதியாக இருந்தார். ஆனால் ரஜினி தனக்கு கிரேஸ் இல்லை என்றும், அரசியல் செய்கிற அளவுக்கு உடலில் தெம்பு இல்லை என்று தெரிந்துகொண்டு விலகிவிட்டார். அதற்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப அண்ணாமலை வருகிறபோது, ஒரு இளைஞர் என்பதால் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்த இடத்தில் அண்ணாமலை தன்னை ஒரு தலைவராக காட்டிக் கொண்டாரா? என்றால் விளம்பரம் இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையை உருவாக்குகிறார்.
குருமூர்த்தி, புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில் அண்ணாமலையின் வேகமான செயல்பாடுகளே அவருடைய பதவி பறிபோவதற்கு காரணம் என்று சொல்கிறார். அண்ணாமலையால் தமிழக பாஜகவில் பெரிய மாற்றங்கள் நடக்கவில்லை. உண்மையை சொல்வதன்றால் அந்த கட்சி நகராமல் அந்த இடத்திலேயே கட்டுபட்டு இருப்பதற்கு காரணம் அண்ணாமலைதான். வாக்கு திருட்டு விவகாரத்தில் பாஜக எந்த மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை .2024 மக்களவை தேர்தலின்போது குறைந்தபட்சம் 30 முதல் 32 சதவீத வாக்குகளையாவது பெற்று விடலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. பாஜகவுக்கு கூடுதலாக சேர்க்கப்பட்ட 7.5 சதவீதம் ஆகும். பாஜக வாங்கியதாக சொல்லப்படுகிற 18 சதவீதத்தில் 7 சதவீத வாக்குகளை கழித்தால் 11 சதவீத வாக்குகள் தான் வரும். பாமகவுக்கு 5 சதவீத வாக்குகள் உள்ளன. தினகரனுக்கு 2- 3 சதவீதம் வாக்குகள் உள்ளன. இதைவிட்டால் ஓபிஎஸ், தேவநாதன், தமாகா போன்றவர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் எல்.முருகனை வைத்து நகர்த்தியபோது எம்எல்ஏக்கள் வந்தனர். அதற்கு முந்தைய தேர்தல்களில் எம்.பிக்கள் கிடைத்தனர். ஆனால் இந்த தேர்தலில் ஒரு சீட்டை கூட எம்.பி. ஆக கன்வெர்ட் செய்ய முடியவில்லை. தேர்தல் முடியும் வரை அவர்கள் காத்திருந்தனர். தேர்தல் முடிந்ததும் அவரை விலகுமாறு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் அண்ணாமலைக்கு தானாக பதவி விலக விருப்பம் இல்லை. அண்ணாமலையை வைத்து அவர்கள் போட்ட திட்டங்கள் தோல்வி. அண்ணாமலையின் எல்லா திட்டங்களும் தோல்வி என்பதால்தான் இன்றைக்கு அண்ணாமலையை காலி செய்தாக வேண்டும் என்று வந்துள்ளனர்.
கல்யாணராமன் போட்டிருக்கும் பதிவில், முதலில் ரகசியமாக சென்று எடப்பாடியாரின் காலில் விழுந்து மன்னிப்பு. பின்னர் டெல்லிக்கு சென்று நிதியமைச்சர் காலில் விழுந்து மன்னிப்பு. பிறகு ஐடிசி கிராண்ட் சோழாவில் காலை உணவுடன் சந்தித்த தலைவர்கள் மத்தியில் செருப்படி. செப்டம்பர் 5ஆம் தேதி திருட்டுத்தனமாக வாங்கிய சொத்து ஆவணம் கைக்கு வந்தது. அதுவெளியே வந்தது. குருமூர்த்தியின் பேட்டியில் உண்மைக் காரணம் வெளியீடு என்று எல்லாவற்றையும் சொல்லியுள்ளார். இதற்கு மேலும் சி.எம்., பி.எம்., என்று அவன் நினைத்தாலோ, அவனுடைய அடிவருடிகள் நினைத்தாலோ பரிதாபத்தில்தான் முடியும் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் அண்ணாமலையின் உறவினரான சந்திரப்பட்டி செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான மணல் சேம்பரில் சோதனை நடைபெற்றது. அதில் 240 கோடிக்கான ஆவணங்களை சிக்கின. அதுமட்டும் இன்றி ரூ.800 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வந்தன. அதுபோல பல சொத்துக்கள் இருக்கின்றன. வெளிநாட்டிற்கு படிக்க போனபோது இங்கு சம்பாதித்த பணத்தை எல்லாம், வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளார் என்பதற்கான தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆருத்ரா மோசடியில் மட்டும் 10 சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும் 250 கோடி.
அதுபோக பாஜக மாநில தலைவராக இருந்தபோது பல்வேறு முதலாளிகளிடம் பல கட்டங்களாக மாதம் மாதம் கோடிக்கணக்கான ரூபாய் வாங்கப்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் அமர்பிரசாத் ரெட்டிதான் வசூல் செய்து கொடுத்தார். அண்ணாலை என்கிற புதிய சக்தியை நம்பி, கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல முதலாளிகள் இனிமேல் இவர்தான் தலைவர் என்று முடிவு செய்துவிட்டனர். 2024 தேர்தல் வரையிலும் அண்ணாமலையை மையமாக வைத்தே டெல்லி பாஜகவும் இயங்கியது. குருமூர்த்தி 2026 சட்டமன்றத் தேர்தல் தங்களுக்கு இலக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். அதன் மூலம் அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை திமுக கூட்டணி 48 சதவீத வாக்குகளுடன் வலிமையாக உள்ளது. அரசக்கு எதிராக ஆன்டி இன்கம்பன்சி இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் பேச்சு என்பது பாஜக கூட்டத்திற்கு எதிரான கருத்தாகும். ஆனாலும் இருவரும் தொடுகிற புள்ளி ஒன்றுதான். அதிமுக கூட்டணி தோல்வி அடையும் என்பதுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.