Homeசெய்திகள்ஆவடிஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள்  நூதன போராட்டம்

ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள்  நூதன போராட்டம்

-

ஆவடி வி.ஜி.என் குடியிருப்பு வாசிகள் அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று இருள் சூழ்ந்த பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள் நூதன போராட்டம்

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 37வது வார்டு வி ஜி என்  காஸ்மோஸ்  [VGN KOSMOS] குடியிருப்பு பகுதியில் கடந்த நான்காண்டுகளுக்கு  மேலாக 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து  வருகின்றனர். இக்குடியிருப்பு வாசிகள் ஆவடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் விநியோகிப்பதற்கான முன்பணம் போன்றவற்றை சரியான முறையில் செலுத்திவருவதாகவும் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இப்பகுதியில் சாலைகள் முற்றிலும் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், மின்சார விநியோகம் இருந்தும் மாநகராட்சி தெரு விளக்குகள் அமைத்து தராமல் நான்கு ஆண்டுகளாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  ஏமாற்றி வருவதாக, குற்றம் சாட்டுகின்றனர்.  அதனால் இப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும், இரவு பகல் பாராமல் மது அருந்துவது வழக்கமாக இருப்பதாகவும், பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத வகையில் இருள் சூழ்ந்து இருப்பதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள் நூதன போராட்டம்

மேலும் அப்பகுதியில் கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால்வாய் பணிகள் பல ஆண்டு காலமாக நிறைவு பெறாமல் இழுப்பரியாக  நடந்து வருகிறது.  குறிப்பாக சேக்காடு பகுதியில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர்கள் வி ஜி என் காஸ்மோஸ் பகுதியில் அமைந்துள்ள 2 பூங்காக்களில் தேங்கி உள்ளது.  இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய குழந்தைகள் மற்றும் பொது மக்கள்ளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் வரும் அபாயம் இருப்பதாகவும், விஷ பூச்சிகள் அதிக அளவில் பூங்காவில்  இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு வாசகங்கள் கொண்ட பாதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள் நூதன போராட்டம்

இது ஒருபுறமிருக்க மாதமாதம் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் மாமன்றம் கூட்டத்தில்  பல முறை ஆணையாளர், பொறியாளர்களிடம்  அப்பகுதி மக்கள் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாமன்றம் கூட்டம் கண்துடைப்பிற்கு மட்டுமே நடத்தப்படுவதாகவும்  குற்றம் சாட்டுகின்றனர்.

ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள் நூதன போராட்டம்

அதனை தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி குறைகளை சீர் செய்யும் விதமாக போர்கால அடிபடையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும்  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இருள் சூழ்ந்த சாலையில்  கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள் நூதன போராட்டம்

இந்த போராட்டத்திற்கு பிறகு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  அப்பகுதியில் தேங்கி இருக்கக்கூடிய கழிவு நீர்களை பக்கெட்டில் அள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று மேலும் தீவிரமாக போரடப்போவதாக  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ