ஆவடி அடுத்த பட்டாபிராமில் புதிதாக திறக்கப்பட்டமதுபான கடையை மூட இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி அடுத்த பட்டாபிராம் சி டி எச் சாலை குமரன் தெருவில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடையை மூட வலியுறுத்தி பாஜக சார்பில் நெல்லை ராஜா அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினரும் பாஜகவினரும் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பாரதியார் நகர் குடியிருப்பு பொதுநல சங்க பொதுச் செயலாளர் குமார் தெரிவித்தது, பட்டாபிராம் பகுதியில் சி டி எச் சாலையில் ஸ்ரீதர் பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் எதிரிலேயே தற்போது புதிதாக அரசு மதுபான கடை திறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே இதே போல் 2012ல் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்த நிலையில் பல போராட்டங்கள் நடத்தி அந்த கடையை மூடினோம். தற்போது அதே நிலையில் இந்த திருக்கோவில் எதிரிலேயே மதுபான கடையை அரசு அமைத்தது அதிர்ச்சி அளிக்கின்றது.
மேலும் பாரதியார் நகர் செல்ல இரண்டு வழிகளே உள்ளது, இந்த வழிகளில் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் செல்லக்கூடிய நிலையில் தற்போது இரண்டு வழியிலும் இரண்டு மதுபான கடையை அமைத்து அரசு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
மேலும் அரசு தற்போது அமைத்துள்ள இந்த கடையை நீக்க, உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்கள் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள், மற்றும் அனைத்து கட்சி கூட்டமைப்பின் ஆதரவோடு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.