Homeசெய்திகள்ஆவடிரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை...

ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!

-

- Advertisement -

ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண்ணை ரசாயன பொடி தூவி ஆறு சவரன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்து தானே நகைகளை கழட்டித் தந்ததாக பாதிக்கப்பட்ட பெண் வேதனை!!

ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். இவரது மனைவி உமாராணி திருமுல்லைவாயில் சோழம்பேடு பகுதியில் சிறிய ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் இருவர் ஜாக்கெட் எடுப்பதாக கூறி துணிகளை பார்த்து உள்ளனர். பின்னர் தாங்கள் எடுத்த துணியில் ரசாயன பொடி ஒன்றை தூவி உமாராணி மீது வீசி உள்ளார்.

ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!அப்போது சுயநினைவை இழந்த உமாராணி தான் அணிந்திருந்த தாலி சங்கிலி செயின் உள்ளிட்ட 6 சவரன் தங்க நகைகளை கழற்றி கொடுத்ததாகவும் நகைகளை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசாரில் அளித்த புகாரின் பேரில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர்கள் தெலுங்கு மொழி பேசியதால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களா அல்லது வட இந்தியர்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆவடி அருகே கடையில் தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்டு ரசாயன பொடி தூவி சுயநினைவை இழக்க செய்து நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ