Homeசெய்திகள்க்ரைம்வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம்: அடகு கடையை ஏமாற்றிய பலே ஆசாமி..!

வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம்: அடகு கடையை ஏமாற்றிய பலே ஆசாமி..!

-

- Advertisement -

வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம் வைத்து பணம் பெற்று அடகு கடை உரிமையாளர்களை ஏமாற்றிய நபர் கைது.வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம்: அடகு கடையை ஏமாற்றிய பலே ஆசாமி..!பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவை சேர்ந்த 39 வயதுடைய பிரகாஷ் இவர் நேற்று பெரம்பூர் ஜானகிராமன் நகரில் அடகு கடை நடத்தி வரும் பிரகதீஸ்வரனிடம் பழைய வண்ணாரப்பேட்டை GA ரோடு பகுதியில் உள்ள SDBI வங்கியில் 62,000 ஆயிரம் ரூபாய்க்கு 4 சவரன்  நகைகள்  அடகுவைத்து இருப்பதாகவும் அதை மீட்டு உங்களது அடகு கடையில் வைத்து  கொள்ளுங்கள் என்று கூறி பிரகதீஸ்வரனை நம்பிக்கையாக பேசி அவரை வங்கிக்கு அழைத்து சென்று பணம் பெற்றுள்ளார்.

பிரகாஷின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அடகு கடைக்காரர் வங்கி ஊழியர்களிடம்  விசாரித்த போது  அவருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும்  கடந்ந ஆண்டு இது போல அடகு கடை உரிமையாளரை  ஏமாற்றிவர் இவர்தான் என்று கூறியதால், பிரகாஷ்  ஏமாற்று பேர்வழி என்று  தெரிய வரவே அவரை பிடித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து தண்டையார்பேட்டை போலீசார் பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது இதே போல் கடந்த ஆண்டு தண்டையார்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்த கோகுல் என்ற அடகு கடை உரிமையாளரிடம்  ரூ. 90,000 ஆயிரம் ரூபாய் பணமும், கொருக்குப்பேட்டையில் அடகு கடை உரிமையாளர்  அஜய் என்பவரிடம் 73,000/- ரூபாய் பணமும்  கோயம்பேடு பகுதியில் அடகு கடை உரிமையாளர் கார்த்திக்  என்பவரிடம் 64,000/- ரூபாய்  பணத்தை ஏமாற்றி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரகாஷ் மீது நான்கு வழக்குகள்   பதிவு செய்து  சிறையில் அடைத்தனர்.

மூன்றரை பவுன் நகை… உஷாரான அடகு கடை உரிமையாளர் – கில்லாடிப் பெண் கைது

MUST READ