spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பல் மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்! போலீசார் விசாரணை…

பல் மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்! போலீசார் விசாரணை…

-

- Advertisement -

2023-ல் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பல் மருத்துவமனையில் 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.பல் மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிா்கள்! போலீசார் விசாரணை…2023-ல் வாணியம்பாடியில் உள்ள பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்தனா். தற்போது இவா்கள் பல் கிளீனிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் உயிரிழந்ததாக, தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனரகமும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையும் சோ்ந்து அமைக்கப்பட்ட குழுவின் மூலமாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், சிகிச்சைக்கான கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல் அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தி உள்ளனா். இதனால்  மூளைத்தொற்று ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனா். கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் அளித்த புகார்கள் மீது  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், உயிரிழந்தவர்களில் ஒருவரான இந்திராணியின் மகன் ஸ்ரீராம் குமார் என்பவர் மருத்துவர் அறிவரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாணியம்பாடி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளாா். திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி மருத்துவர் அறிவரசனிடம் விசாரணை நடத்தி வருகின்றாா்.

பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் – அன்புமணி அதிரடி!

we-r-hiring

MUST READ