spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை

-

- Advertisement -

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை

சென்னை ஆதம்பாக்கம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..

ஆதம்பாக்கம் அடுத்த தில்லைகங்கா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் ஹரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி சிவகாமசுந்தரி (வயது -81). இவர்களது மகன் ஸ்ரீராம். இவர் பல்லாவரத்தில் உள்ள நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். மருமகள் பானு. இவர் எல்.ஐ.சி.யில் பணிபுரிந்து வருகிறார்.

we-r-hiring

இன்று காலை வழக்கம் போல ஸ்ரீராமும், பானுவும் வேலைக்கு சென்றனர். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலை பணி முடித்து பானு வீட்டிற்கு வந்தார். அப்போது சிவகாமசுந்தரி உறங்கிய நிலையில் இருந்ததால் எழுப்பாமல் விட்டார். சற்று நேரத்தில் ஸ்ரீராம் வந்தபோது, தாய் துாங்கிக் கொண்டிருப்பதாக கருதினார். ஆனால், படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த பணம், நகைகள் மாயமாகியிருந்தன.

உடனடியாக தாயை வந்து பார்த்தபோது, அவர் அணிந்திருந்த 10 சவரன் செயின், வளையல்கள் மாயமாகி இருந்தது. மூக்கில் ரத்தம் வந்திருந்தது. உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆதம்பாக்கம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டனர். அது பழவந்தாங்கல் பகுதி நோக்கி ஓடியது. முதல் கட்ட விசாரணையில் மூதாட்டி காலை 11:00 மணி அளவில் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.வீ்ட்டின் முகப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குடை பிடித்த படி ஒரு நபர் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. அவர் கொலையாளியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

MUST READ