ஏற்காடு எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 4 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு காயங்கள். சிறுமியுடன் பயணித்த நபர்களுடன் ரயில்வே போலீசார் விசாரணை.நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் காவலர் வேலு என்பவர் பயணம் செய்த போது அரக்கோணம் அருகே நான்கு வயது சிறுமி ஒருவர் உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்ட காயங்களோடு பயணம் செய்துள்ளதை கண்டுள்ளார். அவருடன் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பயணம் செய்துள்ளனர்.
இது குறித்து சிறுமியிடம் காவலர் பேசிய போது, தன்னோடு பயணம் செய்யும் தனது தாய் தனக்கு சூடு வைத்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று அதிகாலை ரயில், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த போது, தலைமை காவலர் வேலு, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தையை மீட்டனர்.

மேலும், சிறுமியுடன் வந்த ஆண் மற்றும் பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார், குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தன் பேரில், நான்கு வயது சிறுமியை குழந்தைகள் நல அலுவலர்கள் மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனர்.
மேலும், சிறுமியுடன் வந்த ஆண் பெண் யார்? என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டோ மீது விழுந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்…இயக்குநரின் மகன் கைது!