spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

-

- Advertisement -

பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் கட்டி தர வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பேடு ஊராட்சியில் காட்டுப்பள்ளி – மகாபலிபுரம் சாலை அமைப்பதற்காக ஊராட்சிமன்ற கட்டிடம், கிராம சேவை கட்டிடம், அங்கன்வாடி உட்பட 5 கட்டிடங்கள் இடிக்கப்பட்டு இழப்பீடு தொகை ஊரக வளர்ச்சித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஐந்து கட்டிடங்களையும் அதே கிராமத்தில் 2கோடி ருபாய் மதிப்பீட்டில் கட்ட வருவாய் துறையினரால் அளவீடு செய்யப்பட்டது. சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் கட்டி தர வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி, அவற்றில் இயங்கி வந்த தனியார் நிறுவன கட்டிடங்களை 4 ஜெசிபி இயந்திரங்கள் உதவியுடன் அதிகாரிகள் இடித்து ஆக்கிரமிப்பை அகற்றி வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

we-r-hiring

புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கான அரசு கட்டிடங்களை கட்டி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

MUST READ