spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு -  கே.என்.நேரு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு –  கே.என்.நேரு

-

- Advertisement -

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  உள்ளனர். திமுக சார்பில் போட்டியிடும் அன்னிர் சிவாவை ஆதரித்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு -  கே.என்.நேருஅதனூர் விநாயகபுரம் ,தர்மபுரி, தாங்கள் உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் நேரு பிரச்சாரம் செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாண்டு காலம் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு அமைச்சர் நேரு வாக்கு வேட்டையாடினார்.

we-r-hiring

 

அமைச்சர் நேரு,

கூரை வீடுகள் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் கூரை வீடுகளை சீரமைத்து ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முதலமைச்சர் திட்டம் தீட்டியுள்ளார் எனவும், விக்ரவண்டியில் அதனூர் பகுதியில் உள்ள அத்தனை தொகுதி மக்களுக்கும் வீடுகள் கொண்டு வந்து தருவது என்னுடைய பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு -  கே.என்.நேருவிக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செய்துள்ளதை அமைச்சர் நேரு சுட்டி காட்டியுள்ளார். எஞ்சியுள்ள பணிகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தார். விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர் கௌதம சிகாமணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ கணபதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் திமுக வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ