Homeசெய்திகள்தமிழ்நாடுநீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக் கூடாது – நீதிபதிகள் எச்சரிக்கை…

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக் கூடாது – நீதிபதிகள் எச்சரிக்கை…

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் தீபத்தூன் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் முக்கிய திருப்பமாக, தனி நீதிபதி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால் அவசர முடிவெடுக்க முடியாது என்றும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக் கூடாது – நீதிபதிகள் எச்சரிக்கை…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகேயுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து பல உத்தரவுகள் பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

we-r-hiring

அதே நேரத்தில், தர்கா தரப்பும் தனி நீதிபதி ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றியிருப்பது காரணமாக, இந்த வழக்கில் அவர் தொடர்புடையவராகிவிட்டார்; எனவே அவர் விசாரணை நடத்தக் கூடாது என்று வாதிட்டது. இதனை ஆதரித்து மூத்த வழக்கறிஞர்கள் மோகன் மற்றும் வாஞ்சிநாதன் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால் அவசர முடிவெடுக்க முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக் கூடாது என்றும், சிறிய பிரச்சினையை பெரிதாக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.

மேலும், ஏற்கனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்த பிறகு, அதனை மீறி தனி நீதிபதி விசாரணை நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியது.

அயோத்தியும் – திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா கதிரவன் மற்றும் ரவீந்திரன், இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பின்னரும் தனி நீதிபதி வழக்கை தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த நீதிமன்றம், ஒரு வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்துவிட்டால், அதை தனி நீதிபதி விசாரிக்க முடியாது என்று விளக்கம் அளித்தது.

இதையடுத்து, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்கலாமா அல்லது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் வரை, தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மற்றும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க மூத்த வழக்கறிஞர் இளங்கோவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆன்மீகம் அல்ல… வரலாற்றின் மீது நடத்தப்படும் வன்முறை…

MUST READ