spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இனி வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

-

- Advertisement -

தென் தமிழகத்திலேயே தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தாா்.இனி வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி பகுதியில் உள்ள தமிழக அரசின் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், தென் தமிழகத்திலேயே தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்து பேசும்போது, மதுரை போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் வலுவான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பினையும் , புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க தமிழக அரசு உறுதிமொழி பூண்டுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோரை அச்சமின்றி புதுமைகளை உருவாக்கவும், வணிகமயமாக்கல் , சந்தைப்படுத்துதல், நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு இந்த தொழில்நுட்ப மையத்தை நாடும் தேவை அதிகரித்து வருகிறது .  மதுரை மண்டலத்தில் மட்டும் 481 ஆராய்ச்சியாளர்கள்,  293 காப்புரிமையாளர்கள் இந்த துறைகளில் இணைந்துள்ளனர்.

மேலும் ஐடி துறையில் தற்போது இருபதிலிருந்து முப்பது சதவீத இந்தியர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இது நாளடைவில் குறைந்து வருகிறது . குறிப்பாக மதுரையிலேயே வடபழஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய, பெரிய ஐடி நிறுவனங்கள் தற்போது இங்கு அமைத்து நம்முடைய வளர்ச்சிக்கு உரித்தாக செயல்பட்டு வருகிறது . ஆகையால் நாளடைவில் நம் நாட்டினர் அயல் நாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது . நம் தமிழகத்திலேயே பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இங்கு குவியத் தொடங்கியுள்ளன. முன்னதாக,  தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்து , அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாணவர்களுடைய கண்டுபிடிப்பான தொழில்நுட்பத்தை கேட்டறிந்தார்.

உங்க குழந்தையை யார் பாத்துக்க போறீங்க?…. விவாகரத்து வழக்கில் ஜி.வி. பிரகாஷ் சொன்ன பதில்!

we-r-hiring

MUST READ