கோவையில் சுமார் 217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை
33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன், ரவீந்திரன் மற்றும் சந்தான கோபால் ஆகியோர் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தை தொடர்ந்திருந்த வழக்கில், கடந்த 1988 ஆம் ஆண்டு உப்பிலி பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரிய திட்டத்திற்காக சவுரிபாளையம் கிராமத்தில் சுமார் 11.95 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியதாகவும் ,ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும் எனவே நிலத்தை கையப்படுத்திய உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நிலம் கையகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் இரு நீதிபதிகள் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எம் எம் சுந்தரேஷ் மற்றும் நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது வீட்டு வசதி வாரிய சார்பில் வீட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, இதே நில உரிமையாளர்கள் கடந்த 1991-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு தாசில்தாரால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை எதிர்த்து வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் மேலும் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனுவும் கடந்த 2000 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டு வீட்டு வசதி வாரியத்திற்கு சாதகமான உத்தரவு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் நிலத்தை திருப்பி ஒப்படைக்க கூறி மீண்டும் அவர்கள் அரசிடம் முறையிட்டதாகவும் ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டதால் தான் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக வாதிட்டார்.
எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்டு, நிலத்தை மீட்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். சுமார் 33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது அந்த இடத்தை மீட்க வீட்டு வசதி வசதி வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது… உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!