Homeசெய்திகள்தேர்தல் 2026திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெல்லும் – பெ.சண்முகம் நம்பிக்கை

திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெல்லும் – பெ.சண்முகம் நம்பிக்கை

-

- Advertisement -

நிச்சயமாக திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற அறிகுறிகள்  காலையில் இருந்து தெரிகிறது என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பெ.சண்முகம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்.திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெல்லும் – பெ.சண்முகம் நம்பிக்கைவாக்குப்பதிவு நாளில் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில், ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பதாகை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம் தனது வாக்கை பதிவு செய்தார்.

குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பொதுமக்களுடன் இணைந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்குரிமையை பயன்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக நாட்டில் வாக்குரிமை மிக முக்கியமானது என்பதால், வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

we-r-hiring

மேலும், தற்போதைய அரசியல் நிலவரத்தை குறிப்பிட்டு, திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற அறிகுறிகள் காலை முதலே தென்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

பசுமை வாக்குச்சாவடி – வாக்காளர்களை கவரும் புதிய முயற்சி…

MUST READ