spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை5ஆம் தேதி அதிமுகவுக்கு ரிசல்ட்! செங்கோட்டையனை இயக்கும் அந்த சக்தி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

5ஆம் தேதி அதிமுகவுக்கு ரிசல்ட்! செங்கோட்டையனை இயக்கும் அந்த சக்தி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டார் என்றும், செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை இயக்கும் சக்தி அண்ணாமலை தான் என்றும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வரும் 5ஆம் தேதி மனம் திறந்துபேச உள்ளதாக அறிவித்திருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- செங்கோட்டையன் அன்றைய தினம் எதையும் அறிவிக்க மாட்டார். தன்னுடைய கோபிசெட்டிப்பாளையம் அலுவலகத்தில் பெரியார் படத்தை செங்கோட்டையன் வைத்துள்ளார். அப்போது அவர் அதிமுகவில் இருந்து விலகி பெரியாரை மையமாக கொண்ட ஒரு கட்சியில் சேரப் போகிறாரா? என்கிற சந்தேகம் எழுகிறது. பெரியார் என்கிறபோது திமுக, விஜய் போன்றவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களை விஜய் ஏற்பதாக இருந்தால் இந்நேரம் 2 ரயில் பெட்டிகள் முழுவதும் ஆட்கள் வந்திருப்பார்கள். அன்வர் ராஜா, மைத்ரேயன் போன்றவர்கள் திமுகவுக்கு செல்லும் முன்பு, விஜய் கட்சியில் சேர தான் முயற்சித்தனர். விஜயை சுற்றியிருக்கும் நபர்களை தாண்டி, யாரும் உள்ளே போக முடியாது. எனவே செங்கோட்டையன் விஜயிடம் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அவர் திமுகவில் சேர்ந்தார் என்றால், 2 நாட்களில் செய்தியாக வந்து முடிந்துவிடும்.

காரணம் முத்துசாமி போன்றவர்களை அதிமுகவில் இருந்து வெளியேற்றியவர் செங்கோட்டையன். போட்டி அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் முத்துசாமி. கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஜெயலலிதாவுக்கு கடும் போட்டி அளித்தவர். அவரையே கட்சியில் இருந்து வெளியே அனுப்பினார். அதேபோல், தோப்பு வெங்கடாசலம் போன்ற பலரையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றி உள்ளார். செங்கோட்டையன் வெளியேறுவதால், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியை தாண்டி பெரிய அளவில் தாக்கம் இருக்காது. அவர் அதிமுகவில் இருந்து வெளியே போகவும் மாட்டார். நாளைக்கு அவர் சில தத்துவ ஞான மொழிகளை செய்வார். இந்த நாடகத்தை எல்லாம் நடத்துவது யார் என்றால்? அண்ணாமலை, பாஜக தான். சமீபத்தில் செங்கோட்டையன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி இருந்தார். குருமூர்த்தி, கே.டி.ராகவன் ஆகியோர் மூலமாகதான் இந்த சந்திப்பு நடைபெற்றது. இவை எல்லாம் பாஜகவின் பழைய ஆபரேஷன்கள். தற்போது நடப்பது பழைய ஆபரேஷனின், தொடர்ச்சியாகும்.

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை

தற்போது அண்ணாமலை, வியூக அமைப்பாளர் சுனில் உடன் சேர்ந்து ஒரு புதிய ஃபார்முலாவை உருவாக்கி இருக்கிறார். தினகரன், என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்து போட்டியிடக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், அதிமுக வாக்குகள், அதிமுகவுக்கு விழாமல் தினகரனுக்கு மாற்றுவதற்கான வேலையை அண்ணாமலை செய்திருக்கிறார். இந்த திட்டத்தை அமர்பிரசாத் ரெட்டி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் போட்டு கொடுத்துவிட்டார். இதனை அடுத்து, டெல்லியில் நேற்று அண்ணாலையிடம் விசாரணை கமிஷன் நடைபெற்று உள்ளது. தமிழக பாஜக தலைவர்கள் அனைவரும் டெல்லியில்தான் உள்ளனர். இதில் ஆச்சரியப்பட தக்க விஷயம் என்ன என்றால்? இந்த திட்டங்களை எல்லாம் பாஜகதான் உருவாக்கியது. ஆனால் தற்போது அதனை செயல்படுத்த விரும்பவில்லை. ஆனால் தொட்ட திட்டத்தை விடக்கூடாது என்று அண்ணாமலை போன்றவர்கள் உள்ளனர். சசிகலா, தினகரன் போன்ற அதிமுக அதிருப்தி தலைவர்களை திரட்டி, அதிமுகவை கைப்பற்றி புதிய பொதுச்செயலாளரை கொண்டுவருவது தான் பாஜகவின் திட்டம். ஆனால் தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்த விரும்பவில்லை. அவர்களின் விருப்பம் அதிக இடங்களை கைப்பற்றுவதாகும். அதனால் அவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைக்காத முக்குலத்தோர் வாக்குகள் உள்ளிட்ட வாக்குகளை திரட்டுகிறார். மதுரை உள்ளிட்ட இடங்களில் 2 நாட்கள் சுற்றினார். பாஜக 18 சதவீத வாக்குகள் தங்களுக்கு உள்ளது. அதனால் பாதிக்கு பாதி சீட்டுகள் என்று உறுதியாக உள்ளது. அதனால்தான் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அண்ணாமலையையும், நயினாரையும் சொல்ல வைத்தார். அதிமுக – பாஜக கூட்டணி இன்னும் ஒரு முழுமையான வடிவத்தை பெறவில்லை. ஒவ்வொரு கட்சியினரின் தங்கள் முடிவை பின்னர் அறிவிப்பதாக சொல்லியுள்ளது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் சரிசெய்து, அதனை கூட்டணி தண்டவாளத்தில் ஏற்றி, அதை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் வைத்து எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில், அண்ணாமலை என்கிற மற்றொரு ரயில் என்ஜின் கூட்டணியை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது. அண்ணாமலையின் முதன்மையான நோக்கம் என்பது அதிமுகவை தோற்கடிப்பதாகும்.

லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி - டிடிவி தினகரன் விமர்சனம்

நான் அமைத்த கூட்டணி 18 சதவீதம் வாங்கியது. அதை தொடர்ந்தால் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்குகளை பெற்றிருக்கலாம். ஆனால் அதை விடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள். இந்த கூட்டணி தவறு. எனவே என்னுடன் கூட்டணி வைத்தவர்களை எல்லாம் கலைப்பேன். நயினார் நாகேந்திரனை தலைவராக போட்டால், அவருடைய டீமையே நான் தோற்கடிப்பேன். இது அண்ணாலையின் சாணக்கிய சபதமாகும். டிடிவி தினகரன், செங்கோட்டையன் போன்றவர்களிடம் இருந்து வெளிப்படுவது எல்லாம் இதன் தாக்கம் தான். ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக இல்லாத ஒரு அதிமுகவை உருவாக்கி கூட்டணி வைப்போம் என்று, சொல்கிற அளவுக்கு சென்றுவிட்டனர். இது சாத்தியமற்றது. பாஜக தொடங்கிய இந்த ஆட்டத்தை, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உடனடியாக முடித்துக்கொள்ளவும் தயாரில்லை. காரணம் அதிமுகவிடம் இருந்து 100 சீட்டுகளை வாங்குவதில் பாஜகவில் உறுதியுடன் உள்ளது. அப்படி 100 சீட்டுகளை வாங்கினால்தான் அதிமுகவை அழிக்க முடியும். தமிழ்நாட்டில் 2வது பெரிய கட்சியாக வர முடியும் என்று நினைக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களை அதிமுகவில் சேர்த்தால் தன்னுடைய பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்கிற அச்சம் காரணமாகவே, அவர்களை சேர்க்க மறுக்கிறார். ஏனெனில் அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்கு சவால் விடுப்பவர்கள். இவர்களுக்கு எப்படி நீங்கள் வாய்ப்புகளை வழங்குவீர்கள்? இவர்கள் அனைவரும் பாஜகவின் கைப்பாவைகள். இதன் காரணமாக பயன் என்பது பாஜகவுக்கு தான். அவர்கள் எடப்பாடி பழனிசாமியை, மிரட்டி கூட்டணி வைத்தது போல நாம் எதிர்பார்ப்பதை விட அதிக அளவிலான இடங்களை வாங்கி விடுவார்கள். கலைஞர் காங்கிரசுக்கு 63 இடங்கள் வழங்கியதை விட அதிகளவு இடங்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தாமரை மலர வைக்கப்படும். மக்கள் ஏமாந்து வாக்களித்தார்கள் என்றால்? தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும். இரட்டை இன்ஜின் சர்கார் நடைபெறும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ