spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்

அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்

-

- Advertisement -

26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்அரும்பாக்கம் எம்எம் டிஏ காலனி பகுதியில் வசித்து வந்தவர் மோகன். 26 வயதான இவர் சோழிங்கநல்லூரில் HCL -நிறுவனத்தில் மின் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். திண்டுக்கலை பூர்வீகமாகக் கொண்டவர். திருமணமாகாத இளைஞர் மோகன், பேட்மின்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். கோடம்பாக்கம் சூளைமேடு நெடுஞ்சாலை உள்ள ஏசர்ஸ் பேட்மிண்டன் அகாடமியில் சேர்ந்து தினமும் பேட்மிட்டன் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, விளையாடிக் கொண்டிருந்தபோது அப்படியே திடீரென மயங்கி சரிந்துள்ளார். உடன் இருந்த அவரது நண்பர்கள் ஓடிச் சென்று பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த மென்பொறியாளர் மோகனை கொண்டு சென்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனுமதித்தனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்தவர்களாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மோகனின் உடலை அனுப்பி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

we-r-hiring

இதே போன்று தான் நேற்றைய தினம் சென்னை மந்தவெளி எஸ்.பி.ஐ குடியிருப்பத்தை சேர்ந்த 29 வயதான மெல்வின் என்ற இளைஞர் ஓ.எம்.ஆர் சாலைகள் உள்ள திரையரங்கில் தனது மனைவியுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மெல்வினுக்கும் காயத்ரி என்ற பெண்ணிற்கும் ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்த நிலையில், மனைவி அருகில் அமர்ந்திருந்த பொழுதே அவரது மரணச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இளம் தலைமுறையினரிடையே நிலவும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், வேலை நிமித்தமாக இரவு நேரத்தில் நீண்ட நேரம் கண்விழிப்பது, உடல் உழைப்பு இல்லாமை, மது, சிகிரெட் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் இத்தகைய மாரடைப்பு மரணங்கள் நிகழ்கின்றன. பாரம்பரிய உணவு பழவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறையில் மாற்றங்களை கொண்டு வந்தால்  மட்டுமே இத்தகைய மரணங்களை தடுக்க முடியும்.

ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்?-அன்பழகன் கேள்வி

MUST READ