
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 92.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல், 1,118.50 ரூபாய் விற்கப்படுகிறது.

“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!
எண்ணெய் நிறுவனங்கள் மாதம் ஒருமுறை, சிலிண்டர் விலைகளை மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி, வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,945 ரூபாயில் இருந்து 92.50 ரூபாய் குறைக்கப்பட்டு1,852.50 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லியில் 1,680 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 1,802 ரூபாய்க்கும், மும்பையில் 1,640 ரூபாய்க்கும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயரும் போது, உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கும் உணவகங்கள், அதன் விலைக் குறையும் போது குறைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.