spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராகுல் காந்தி விவகாரத்தில் அரசின் முடிவு எப்படி இருக்கும்? ஏற்கனவே வசித்த அரசு பங்களா தரப்படுமா?

ராகுல் காந்தி விவகாரத்தில் அரசின் முடிவு எப்படி இருக்கும்? ஏற்கனவே வசித்த அரசு பங்களா தரப்படுமா?

-

- Advertisement -

 

"ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்"- ராகுல் காந்தி பேச்சு!
Photo: ANI

ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை அவருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

we-r-hiring

நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஆதிர் ரஞ்சன் சௌத்ரி எழுதியுள்ள கடிதத்தில், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் அவர் மீண்டும் மக்களவை உறுப்பினர் பணியை தொடரத் தகுதியுடையவராகிறார். எனவே, மிக விரைவாக செயல்பட்டு மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்திக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெறுவதற்கு எவ்வளவு நாள் என்று எந்த கால வரம்பும் வரையறுக்கப்படவில்லை. முன்னதாக, லட்சத்தீவு எம்.பி.யாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல் கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி 25- ஆம் தேதி தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் மக்களவைச் செயலகம், தகுதி நீக்க உத்தரவைத் திரும்பப் பெறாமல் இருந்தது.

இது பெரும் சர்ச்சையான நிலையில், முகமது பைசல் உச்சநீதிமன்றத்தில் மக்களவை செயலகம் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கில் தீர்ப்பு வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அவர் மீதான தகுதி நீக்க உத்தரவை மக்களவைச் செயலகம் திரும்பப் பெற்றது.

‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!

இந்த நிலையில், ராகுல் காந்தி விவகாரத்தில் இதுபோன்ற முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டால், அவர் டெல்லியில் முன்பு வசித்த அதே வீடு ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

MUST READ