Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும்...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டாலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!

​சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு, ​”டாஸ்மாக் துறையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. இரவு 10 மணிக்கு மேல் தமிழ்நாட்டில் எந்தவொரு இடத்திலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை இல்லை என்பதைத் தமிழக வெற்றிக் கழக அரசு 100 சதவீதம் உறுதி செய்துள்ளது. ​தற்போது டாஸ்மாக் ஊழியர்கள் முன்வைத்துள்ள ஊதிய உயர்வு கோரிக்கை நியாயமானது. கடந்த கால ஆட்சிகளில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையும், மிக உச்சகட்டமாக 2,000 ரூபாய் வரை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசுக்குக் கூடுதலாக 110.74 கோடி ரூபாய் செலவாகும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஊழியர்களின் ஊதியத்திற்காக 553.72 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

we-r-hiring

​மதுபானங்கள் விலை உயராது – கூடுதல் ₹10 வாங்கினால் டிஸ்மிஸ்
​டாஸ்மாக் கடைகளில் மதுபான பெட்டிகளை இறக்கும் போது அதற்கான கூலி கொடுப்பது, மின்சாரக் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. இனி மதுபானங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களே (Suppliers) அந்தப் பெட்டி இறக்கும் கூலியை ஏற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ‘ஊதிய உயர்வு கொடுத்தால் நாங்கள் கூடுதலாக 10 ரூபாய் வாங்க மாட்டோம்’ என ஊழியர்களே கூறியுள்ளனர். ​ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்பட்டு விட்டதால், மதுபானங்களின் விலை உயர்த்தப்படும் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்; மதுபானங்களின் விலை எக்காரணம் கொண்டும் உயராது.டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!

​அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட கூடுதலாக ஒரு ரூபாய் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அது பணி நீக்கம் (Dismiss) வரை செல்லும். ஏற்கனவே கூடுதலாக 10 ரூபாய் வாங்கிய குற்றத்திற்காக நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ​”மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களின் (Bars) உரிமம் (Tenders) அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.” என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். மேலும், ​FL3 உரிமம் பெற்றுச் செயல்படும் உயர்தர கிளப்புகளில் (Clubs) 21 வயதிற்கு உட்பட்ட நபர்களை அனுமதித்துக் மதுபானங்கள் விநியோகம் செய்தது கண்டறியப்பட்டால், அந்த கிளப்புகளின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுப்பிரியர்களுக்கு சிக்கல்- டாஸ்மாக் பணியாளர்கள் வரும் 10-ம் தேதி குடும்பத்தோடு போராடம்

MUST READ