spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் விபத்து: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமதிப்பு!

கரூர் விபத்து: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமதிப்பு!

-

- Advertisement -

மாநில தன்னாட்சிக்கான அவமதிப்பாக பார்க்கப்படும் சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளாா்.சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்க மாட்டோம்…இது மாநில தன்னாட்சிக்கான அவமதிப்பு - சீமான் கடும் விமர்சனம்

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்தவருமான சங்கரலிங்கனாரின் நினைவு நாளையொட்டி, அவரின் திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது பற்றி பேசினார்.  சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை என சீமான் கூறினார். உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு மாநில உரிமைக்கும் மாநில தன்னாட்சிக்கும் நிகழ்ந்த அவமதிப்பு என்றார்.

தமிழக காவல்துறை விசாரணையில் என்ன குறை? சிபிஐ விசாரணை என்றால் தமிழக காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா? தமிழக காவல்துறை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்றவை மத்திய அரசின் கீழ் உள்ளன. அவை தனித்து செயல்படுகின்றன என்று சொல்லிக் கொண்டு என்ன பயன்? மேலும், இவ்வளவு சிறந்த தமிழக காவல் படை அவமதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினாா்.

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து திருமாவளவன் அளித்த விளக்கத்தைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவரது கருத்துக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை” என சீமான் பதிலளித்தார்.

கரூர் விவகாரத்தில்  த.வெ.க. அரசியல் செய்கிறது. அதற்கு பாஜக, அதிமுக துணை நிற்கிறது என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை தொடர்பான கேள்விக்கு, கடந்த காலங்களில் திமுக என்ன செய்ததோ அதைத்தான் அதிமுக, பாஜக செய்வதாக குறிப்பிட்டாா்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது கொழுப்பெடுத்து போய் இறந்தது எனக் குறிப்பிட்ட சீமான், அதேபோல் இது தியாகியை பார்க்க சென்றோ, சுதந்திர போராட்ட வெற்றி கொண்டாட்டத்திற்கு சென்றோ உயிரிழந்தவர்கள் இல்லை. ஒரு நடிகனை பார்க்க போய் உயிரிழந்திருப்பது, விபத்து என்று கூறினாா்.

விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் இதைப் பற்றி யாரும் பேசி இருக்க மாட்டார்கள். தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் எல்லோரும் இதைப் பற்றியே பேசுகிறார்கள் என்று விளக்கம் அளித்தாா்.

எதையாவது செய்து விஜய்யை பாஜக, அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும். அந்த கூட்டணிக்கு அவர் சென்று விடக்கூடாது என்று மற்றொரு சாராரும் செயல்படுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளாா்.

கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியது பாஜக தான் – அண்ணாமலை..!!

MUST READ