Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப் பள்ளியில் தவெக அமைச்சர் கீர்த்தனா நடத்திய 'ஆய்வு' சர்ச்சை! நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

அரசுப் பள்ளியில் தவெக அமைச்சர் கீர்த்தனா நடத்திய ‘ஆய்வு’ சர்ச்சை! நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

-

- Advertisement -

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளில் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. அந்த வகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளி மாணவிகளிடம் நடத்திய ஆய்வு முறைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அரசுப் பள்ளியில் தவெக அமைச்சர் கீர்த்தனா நடத்திய 'ஆய்வு' சர்ச்சை! நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல்லில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு மாணவிகள் பதிலளிக்கத் திணறியதைத் தொடர்ந்து, “கடைசி பெஞ்ச் (Last Bench) மாணவர்களுக்கு ஒன்றும் தெரியாது” என்ற தொனியில் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் எதிர்ப்புகளைப் பெற்று வருகிறது.

we-r-hiring

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடல்

அமைச்சர் கீர்த்தனாவின் இந்தச் செயலைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஆய்வு என்ற பெயரில் கேமராக்களுடன் சென்று, ஆங்கிலம் தெரியவில்லை என அரசுப் பள்ளிக் குழந்தைகளைக் குத்திக் காட்டியுள்ளார். மாணவர்கள் முன்னிலையிலேயே ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என லேபில் ஒட்டிய அமைச்சர் கீர்த்தனாவின் ஆணவம் கடும் கண்டனத்துக்குரியது. கார்ப்பரேட் முதலாளி போலப் படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டுத் திணற வைப்பதும், ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதும் “ஆய்வு” கிடையாது, அது “அராஜகம்”.

செல்லும் இடமெல்லாம் அதிகாரிகளை விட கேமராமேன்களை கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், ஆய்வு செய்வது எப்படி என்ற அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும். படிக்கும் பிள்ளைகளிடம் தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயற்சி செய்யக் கூடாது. மேலும், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும் என்றும், அரசுப் பள்ளிப் பிள்ளைகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திய அமைச்சர் கீர்த்தனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தொடரும் தவெக – ஆய்வு சர்ச்சைகள்
தவெகவினர் அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்வதாகக் கூறி, வகுப்பறைகளில் முதல்வர் ஜோசப் விஜய்யின் புகைப்படங்களை மாட்டுவது, மாணவர்களிடம் அவரது புகைப்படத்தைக் காட்டிப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது ஏற்கனவே விவாதப் பொருளாகியுள்ளது. அமைச்சர் கீர்த்தனாவின் இந்த ஆய்விற்கு, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்! இபிஎஸ்ஸிடம் தஞ்சை நிர்வாகிகள் அதிரடி கோரிக்கை!

MUST READ