அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண உதவித் திட்டம் உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு வகுக்கும் கொள்கைகளின் பலன்களை பரிசோதிக்கும்படி நீதிமன்றங்களை கேட்பது ஆபத்தானது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் வேலூரை சேர்ந்த பிரவீனா என்பவருக்கு உதவி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. திருமண உதவித் திட்டத்தை உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றி அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கூறியுள்ளாா்.

இதற்கு நடைமுறையில் இல்லாத திட்டத்தின் கீழ் பலன்களை வழங்கும்படி உத்தரவிட முடியாது எனவும், அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண உதவித் திட்டம் உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயா்நீதிமன்றம் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!
