Homeசெய்திகள்தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை - மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை – மனித உரிமை ஆணையம் உத்தரவு!

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது அங்கிருந்த மருத்துவர் பிரபாகர் தனது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அந்த பெண் இறந்துள்ளாா்.தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை - மனித உரிமை ஆணையம் உத்தரவு! மாநில மனித உரிமை ஆணையம் உயிரிழந்த ஜெயாவின் கணவர் கருப்பசாமிக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அரசு இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை என தெரிவித்துள்ள ஆணையம் இழப்பீட்டுத் தொகை 50 லட்சம் ரூபாயில் 6 லட்ச ரூபாயை அரசு செலுத்த வேண்டும். உரிய சிகிச்சை சரியாக அளிக்காததால் பெண் உயிரிழந்துள்ளாா். இதனால், சிகிச்சை அளித்த மருத்துவர் பிரபாகர் 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மற்ற மருத்துவர்கள், பணியாளர்கள் மீதமுள்ள பணத்தை தர வேண்டும். எனவும், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளாா்.

உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் பிரபாகரன் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை, அரசு மருத்துவர் பணியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்யவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு!

MUST READ