தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் நகைக்கடையின் கழிவறை சுவரை துளையிட்டு உள்ளே சென்று 18 கிலோ தங்கம் திருட்டி சென்றுள்ளனர். போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை நகரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் எம்.ஜி. சாலையில் சாய் சந்தோஷி ஜுவல்லர்ஸ் நகை கடையை கிஷோர் என்பவர் நடத்தி வருகிறார்.

சனிக்கிழமை இரவு வழக்கம்போல் நகையை கடை மூடிவிட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திங்கட்கிழமைகான இன்று காலை கிஷோர் கடை திறக்க சென்றபோது கடை முழுவதும் தூசியால் நிறைந்தும் நகைகள் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூமின் சுவரில் ஒரு துளையிடப்பட்டு அதில் இருந்த ₹ 17 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்கத்தை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிசிடிவி காட்சிகளை பார்க்க சென்றபோது சி.சி. கேமிராக்களை உள்ளே வந்ததும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடவியியல் குழு மற்றும் மோப்ப நாய் கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர். சூர்யாபேட்டை டி.எஸ்.பி பிரசன்ன குமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் வந்த கொள்ளையர்கள் நகைக்கடையில் பின்புறம் கழிவறை சுவரில் ஒரு துளையிட்டு, ஒரு மனிதன் உள்ளே செல்ல கூடிய அளவுக்கு உடைத்து பின்னர் எரிவாயு கட்டர் உதவியுடன் ஷட்டரை வெட்டி உள்ளே வந்ததும். பின்னர் திருடர்கள் இரும்பு பெட்டகத்தை ( லாக்கரை) கேஸ் கட்டர் மூலம் திறந்து தங்கத்தை மட்டும் திருடிச் சென்றனர். சுற்றுப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஆதாரங்களைத் தேடி வருகின்றனர். நகைக் கடையின் காட்சிகள் மற்றும் அருகில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அருகிலுள்ளவர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் – எ.வ.வேலு புகழாரம்